மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலை எதிரொலி : கொங்கு மண்டலத்தை ஆணவக்கொலை மண்டலமாக அறிவிக்க சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆணவ கொலை சம்பவத்தை தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை ஆணவக்கொலை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆணவ கொலை சம்பவத்தை தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை ஆணவக்கொலை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும் (22), அதே பகுதியில் உள்ள வர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியாவை காதலிப்பதற்கு கனகராஜின் சகோதரர் பலமுறை தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.



இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், கனகராஜ் வர்ஷினி பிரியாவை கடந்த வாரம் தனது தந்தை கருப்பசாமியிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது, கனகராஜின் தந்தை அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக, அவர்கள் இருவரையும் வெள்ளிப்பாளையம் அருகே ஓர் இடத்தில் தங்க வைத்துள்ளார். கடந்த மூன்று தினங்களாக கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனிடையே, நேற்று மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர், வர்ஷினி பிரியாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து வர்ஷினி பிரியாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வர்ஷினி பிரியாவுக்கு தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக காயங்கள் ஏற்பட்டு உள்ளதால், ஆபத்தான சூழலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், ஆணவ கொலையை தடுக்க வேண்டும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆணவக்கொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஒன்று கூடியுள்ளனர்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறியதாவது ;- தமிழகத்தில் ஆணவ கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழக அரசு இதை ஒப்புக் கொள்வதே இல்லை. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 185 ஆணவக் கொலைகள் நடந்ததுள்ளன. மேற்கு மண்டலத்தில் ஜாதிய கொலைகள் அதிகரித்துள்ளன. அதேபோல, ஆணவ சித்தரவதைகளும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. எனவே, ஆணவ கொலைகள் மற்றும் தாக்குதல்களை தடுக்க தனி போலீஸ் பிரிவு அமைக்க வேண்டும். வர்ஷிணி பிரியாவின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். கொங்கு மண்டலத்தை ஆணவக்கொலை மண்டலமாக அறிவித்து ஆணவக் கொலைகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...