கோவையில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினப் பேரணி : 1.000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவை : சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தின நாளை முன்னிட்டு கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


கோவை : சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தின நாளை முன்னிட்டு கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். "புகை நமக்கு பகை", "போதைப் பொருட்களை தவிர்ப்போம்", உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் சுமித் சரண், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் சிறுது தூரம் பேரணியில் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.



தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது வ.ஊ.சி. மைதானத்தில் நிறைவு பெற்றது. அங்கு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 



இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, காவல்துறை ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...