விபத்தில் காயமடைந்தவரை அவமதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் : ரத்தம் சொட்ட சொட்ட இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவலம்

திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், அரசு ஊழியர்களும் அலட்சியம் காட்டிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருப்பூர் : திருப்பூரில் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், அரசு ஊழியர்களும் அலட்சியம் காட்டிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் வசித்து வருபவர் மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் சிங்கர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாண்டியன் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனம் மோதியதி்ல், தலை, கழுத்து மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்ட சமூக ஆர்வலர் கார்த்திக், பாண்டியனை அரசு மருத்துவமனையில் சேர்க்க உடனடியாக 108 அம்புலன்ஸுக்கு அழைத்தார். அப்போது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அப்பகுதிக்கு வர அரை மணி நேரத்திற்கு மேலாகும் என பொறுப்பற்ற முறையில் தெரிவித்தனர்.



இதனையடுத்து, காயமடைந்த பாண்டியனை தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து ரத்தம் சொட்ட சொட்ட 3 கி.மீ. தூரம் ஓட்டி சென்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவரச சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் உடனடியாக  சிகிச்சை வழங்காமல், அலட்சியமான பதிலை தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் அரசு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொது மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து காயமடைந்த பாண்டியனை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவர்கள் அனுமதித்தனர்.

இதனிடையே, காயம் அடைந்து போராடிக் கொண்டிருக்கும் நபரை மருத்துவமனையில் சேர்ப்பதில் சிறிது தாமதம் செய்திருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நி்லையில், இனியாவது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், அரசு மருத்துவமனை மருத்துவர்களும், ஆபத்து காலங்களில் இருப்பவர்களிடம் மனித நேயத்துடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டுமே தவிர, அலட்சியமாக இருக்கக் கூடாது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...