கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை அரிவாளால் வெட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை அரிவாளால் வெட்டியதில் காதலன் பலியானதையடுத்து, காதலி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜும் (22), அதே பகுதியில் உள்ள வர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில், கனகராஜ் உயர் சாதிப் பிரிவை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், வர்ஷினி பிரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், இவர்கள் இருவரின் காதலுக்கு கனகராஜின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், காதல் ஜோடிகள் இருவரும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கனகராஜின் சகோதரர் வினோத், அரிவாளுடன் வந்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், கனகராஜ் சரமாறியாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், வர்ஷினி பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடிகளை சாதியை காரணம் காட்டி அரிவாளால் வெட்டியதில், வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.