நீலகிரி : குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குட்டியுடன் கூடிய உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, யானை, கரடி, சிறுத்தை. காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதி அருகே கொலக்கம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் கூடிய யானைகள் உலா வருகின்றன. இங்கு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய தொழிலாளர்கள் செல்ல அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக, தேயிலை எஸ்டேட்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த காட்டு யானைகளை அடர்ந்த பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.