கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சி.ஐ.ஐ. சார்பில் தமிழகத்தில் தொழில்முறையை எளிதாக்குவது பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 75 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, திட்டமிட்டவாறு விமானநிலைய விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், கோவை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்படும், என தெரிவித்தார்.