கோவை : மேட்டுப்பாளையத்தில் 8 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரியை முதலமைச்சர் இன்று திறந்து வைத்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கத் தவறியதாக தி.மு.க நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க 6 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 8 கோடி செலவில் அரசு கலைக் கல்லூரி கட்டும் பணி துவங்கியது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பணி இவ்வாண்டு குறித்த காலத்திற்கு ஒரு மாதம் முன்பே கட்டிடப் பணிகள் நிறைவடைந்து இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கலைக் கல்லூரியில் மூன்று அடுக்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் கல்வி பயிலும் அறைகள், ஆய்வகங்கள், முதல்வர் அறை, துறைத்தலைவர்கள் அறை, மாணவர்கள் கூட்டுறவு கடை, சுகாதார அறை, நூலகம் என மொத்தம் 36 அறைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே. சின்னராஜ், கல்லூரி முதல்வர் சொர்ண லதா ஆகியோர் கல்லூரி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தி.மு.க. வினர் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர் தலைமையில் வந்த 50-க்கும் மேற்பட்டோர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் ஏன் தங்கள் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை உரிய விளக்கம் அளிக்கக் கோரி முற்றுகையிட்டனர்.

மேலும், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த அ.தி.மு.க. அரசு வேண்டுமென்றே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டி கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தின் போது, அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், இதேபோன்று அரசு நிகழ்ச்சிகளில் எம்.பி. ராசாவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
அரசு விழாவில் அ.தி.மு.க.வினர் முன்னிலையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினரின் சமரசத்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.