கோவை : மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் வனத்துறை மூலம் 25 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சர பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருக்கும் இந்த பகுதிகளில் அண்மையில் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வனத்துறை கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ளன. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாகக் கூறிய மலை வாழ்மக்கள் மற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வனத்துறை ஏற்பாட்டில் தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக, மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ்பில்லூர், கீழ்செங்கலூர் மற்றும் விளாமரத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் அசில் ரகம் என்ற வகை கோழி குஞ்சுகள் 25 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் இந்நிகழ்வில் கலந்துகொன்டு பயனாளிகளுக்கு இலவச கோழி குஞ்சுகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கோழிக்கூண்டுகள் தயார் செய்வதற்கான அரசு உதவித்தொகை ரூ. 2,500 மற்றும் பயிற்சி உதவித் தொகை ரூ.150 சேர்த்து, ரூ. 2,650 வீதம், 25 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வழங்கப்பட உள்ளது.