நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நிலவிய குளுகுளு காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
நீலகிரி : உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நிலவிய குளுகுளு காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். இந்த மழை உதகையில் தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தும். இந்தாண்டு இன்னும் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், அவ்வப்போது, உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், மாலையில் சாரல் மழை பெய்தது. இந்த மழை உதகை, குன்னூர் சாலைகளிலும், ஓடைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதன் காரணமாக, நிலவிய குளுகுளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்து மகிழ்ந்தனர்