கோவை : நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட தொண்டரணியினரின் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க செயின் மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டது.
கோவை : நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட தொண்டரணியினரின் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க செயின் மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டது.
நடிகர் விஜயின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட விஜய் தலைமை தொண்டரணியினர், குறிச்சி பகுதியில் இலவச ஆட்டோ சவாரி, ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர், அதேபோல், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க செயின் மற்றும் வளையல்களை வழங்கினர். மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பணிகளை விஜய் ரசிகர்கள் மேற்கொண்டனர்.