"அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு தம்பி" : கோவையில் தென்பட்ட மனிதாபிமானமிக்க முதியவர்

தற்போதைய நவீன உலகில் பிறர் பொருட்களின் மீது கொள்ளும் பேராசையினால் கொலை மற்றும் கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. மேலும், ஒருவர் அவரது திறமையினால் மென்மேலும் உயர்ந்தாலும், அதனைக் கண்டு பொறாமைப்படும் உலகில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிபட்ட காலகட்டத்திலும், இதுபோன்றும் ஒருவர் இருப்பாரா..? என்று வியந்து பார்க்கும் வகையிலான முதியவர் ஒருவரை இன்று கண்டிருப்பது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரைப் பற்றி விவரிக்கும் செய்தி இதோ...!


தற்போதைய நவீன உலகில் பிறர் பொருட்களின் மீது கொள்ளும் பேராசையினால் கொலை மற்றும் கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. மேலும், ஒருவர் அவரது திறமையினால் மென்மேலும் உயர்ந்தாலும், அதனைக் கண்டு பொறாமைப்படும் உலகில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிபட்ட காலகட்டத்திலும், இதுபோன்றும் ஒருவர் இருப்பாரா..? என்று வியந்து பார்க்கும் வகையிலான முதியவர் ஒருவரை இன்று கண்டிருப்பது எண்ணிலடங்கா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவரைப் பற்றி விவரிக்கும் செய்தி இதோ...!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே நானும் எனது சக ஊடக நண்பர்களும் நுழைந்தோம். அப்போது, நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டனர். இதற்கு நாங்கள் வாகனத்தில் அமர்ந்தபடியே பிரஸ் என தெரிவித்தேன். அப்படிங்களா..! வாங்க, வாங்க உங்களைத்தான் தேடிட்டு இருந்தோம் என போலீசார் தெரிவித்தனர். நானும், எனது ஊடக நண்பர்களும் என்னவென்று புரியாமல் அவர்களோடு உள்ளே நகர்ந்தோம்.

அப்போது, போலீசார் ஆச்சரியத்துடன் "வயசான தாத்தா ஒருத்தரு ரோட்டுல பணம் கிடந்துச்சுன்னு எடுத்துட்டு வந்திருக்கிறாரு, பாக்கவே ஆச்சரியமா இருக்கு இந்த மாதிரியும் மனுஷன்க இருக்கிறாங்க" எனக் கூறிக் கொண்டு எதிரே வந்த முதியவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, அந்த முதியவரைப் பார்க்கும் போது, எனது மனதிற்குள் சொல்ல முடியாதவாறான ஒரு உணர்வு தோன்றியது. 

பொதுவாக, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் கொலை, கொள்ளை, ரவுடிசம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பற்றிய செய்திகளையே இத்தனை நாட்கள் சேகரித்து வந்த எனக்கு, இந்த சம்பவம் ஒரு புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. வயதான முதியவர் பணத்தின் அருமை பற்றி தெரியாமல், கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து போலீசில் கொடுத்துவிட்டார் என ஒரு சிலர் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தாலும், இந்த செயலின் மூலமாக முதியவர் எனக்கு ஒரு ஹுரோ மாதிரித்தான் தோன்றினார். தொடர்ந்து, இந்த முதியவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்குள் அதிகரித்தது. எனவே, அந்த முதியவரிடம் எனது உரையாடலைத் தொடங்கினேன். 



சாலையில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்ததே எனது முதல் கேள்வியாக இருந்தது. அதற்கு, அவர் கண்ணீர் கலந்த ஆதங்கத்துடன், "அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு தம்பி. பணத்தை தொலைச்சவங்க என்னெல்லாம் நினைச்சு கவலைப்படுவாங்களோ," என பணத்தை தொலைத்தவர்கள் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் 

பின்னர், பணத்தின் தேவை இல்லாதவராக இருப்பாரோ என்ற நோக்கத்தில் முதியவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான், அவர் தனது மிதிவண்டி அருகே எங்களை அழைத்துச் சென்றார். அந்த மிதி வண்டியின் பின்னே ஒரு எண்ணெய் டப்பா கட்டப்பட்டிருந்தது. அப்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? என நான் அவரிடம் கேட்டபோது, அவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.



தொடர்ந்து, "சின்னவேடம்பட்டி பக்கத்தில் இருக்கும் உடையாம்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருகிறேன். வியாபாரம் செய்வதற்காக டவுனுக்குள் தினமும் வருவேன். நாள்தோறும், 50 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்வேன்," என ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவர் கூறினார். 

இதனை கேட்ட என்னுடைய எண்ணத்திலும், 'ஏழ்மையில் வாடும் இந்த முதியவர் தனது குடும்பத்தின் தேவைகளுக்காக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்த நிலையிலேயும், மிதிவண்டியை 50 கிலோ மீட்டருக்கு மேல் மிதித்து தனது சொந்த பணத்தில் உழைத்து வாழ்வது, அடுத்தவர் பணத்தில் வாழ வேண்டும் என்பவர்களுக்கு சவுக்கடியாகவே இருக்கிறது, என்பதை உணர்ந்தேன். மேலும், பணத் தேவைகள் அதிகமாக இருக்கும் இந்த முதியவர் உழைத்த பணமே நமக்குப் போதும்...!. உழைத்த பணமே உடம்பில் ஒட்டும்...! என்று சொல்லி, இந்த வயதிலும் என்னால் ஓடியாடி வேலை செய்ய முடியும் எனக் கூறியது, உழைப்பு மற்றும் நல்ல எண்ணங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதும், என்னைப் போன்ற இளையஞர்களுக்கு ஒரு பாடமாக தெரிந்தது. 

இது குறித்து முதியவர் கூறுகையில், "நான் கிட்டத்தட்ட 20 வருஷமா நல்லெண்ணய் வியாபாரம் செய்கிறேன். உடம்பே சரியில்லையினாலும், என்னால உழைக்காம இருக்க முடியாது. உழைச்சு சம்பாதிச்சு கொண்டுவர காச குடும்பத்துக்கு செலவு பண்ணாதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். என்னைக்கும் அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படமாட்டேன். பணக் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது, இருந்தாலும் அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு தம்பி," என்றார்.

பணத்திற்காக தன் சொந்த உறவுகளையே கொலை செய்யும் இந்த காலத்தில் இவரைப் போன்ற நல்ல மனம் கொண்ட உழைப்பாளிகள் இருப்பதால்தான் நாட்டில் மழை வருகிறது.

இது குறித்து காவலர் ஒருவர் கூறும்போது ;- நாள்தோறும், எத்தனை கொலை, கொள்ளைகள் நாட்டில் நடக்கின்றன. இதற்கு, பெரும்பாலும் பணமே காரணமாக இருக்கிறது. பணத்திற்காக தனது குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைக்கு மனிதர்களின் மனது மாறிக் கொண்டு வருகிறது. அதைப் போல, இருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதரை பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும், அவரோடு இன்று சாப்பிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம், என உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

பின்னர், பணத்தை தொலைத்த ரவிச்சந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் பந்தய சாலை காவல்நிலைய ஆய்வாளர் முன்னிலையில் 6,160 ரூபாய் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு முதியவருக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து ரவிச்சந்திரனின் மனைவி கூறுகையில், "என் கணவர் பணத்தையும், ஐடி கார்டையும் தொலைத்துவிட்டு மிகவும் வருத்தத்துடன் ரோடு ரோடாக தேடிக் கொண்டிருந்தார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்புறம் நான் இறைவன் தான் எங்க பணத்தை தர வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அதேபோல, இறைவன் இந்த தாத்தாவின் மூலமாக எங்களது பணத்தையும், எங்களின் முக்கியமான அடையாள அட்டைகளையும் கொடுத்து எங்களின் மனதை நிம்மதிப்படுத்தி இருக்கிறார்," என்றார்.



'பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்' என்ற பழமொழிகள் இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருந்தாலும், அடுத்தவங்க பணம் நமக்கு எதுக்கு..? உழைத்த காசு தான் உடம்பில் ஒட்டும் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை நடத்தி வரும் இந்த முதியவரின் பயணங்கள் இக்காலத்தில் உள்ளவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...