கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஆர்.இ.டி.ஏ.ஐ.யின் 13-வது வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கலந்து கொண்டார். அப்போது, அரசின் தலையீட்டிற்காக காத்திருக்காமல் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பணிகளை கோவையில் உள்ள தொழில்துறையினர், கூட்டமைப்பினர், தொழில்முனைவோர் தங்களது தோல்களில் சுமந்து செல்வது பாராட்டுக்குரியது என்றார்.

"கோவை மாவட்டம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் காண்கிறோம். இனி வரும் காலங்களில் தயாரிப்புத் துறையில் மேலும் வளர்ச்சியடைய பாதுகாப்புத்துறையின் ராணுவ தளவாட உற்பத்தி மையம் பெரும் பங்காற்ற உள்ளது," என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.
மேலும், சி.ஆர்.இ.டி.ஏ.ஐ. மற்றும் பிற தொழில்துறை கூட்டமைப்பினரின் சிறப்பான பங்களிப்பினால் கோவை மாநகர் சிறந்து விளங்குகிறது என அவர் புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து, சி.ஆர்.இ.டி.ஏ.ஐ.யின் செயலாளர் ராஜிவ் ராமசாமி, நடப்பாண்டின் நடவடிக்கைகளை விளக்கிக் காட்டினார். பின்னர், ஜி.எஸ்.டி. உண்மை பரிசோதனை, ஆர்.இ.ஆர்.ஏ., சி.டி.பி.ஆர். மற்றும் மாநகர அளவிலான திட்டங்கள் பற்றியும் அவர் விவரித்தார்.