சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் மனுவை அவசர வழக்காக விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.