பொள்ளாச்சி ஜெயராமன் மகனின் கார் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி

கோவையில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகியத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 


அனுப்பர்பாளையம்: கோவையில் இருந்து நேற்று மாலை ஒரு காரில் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள், நான்கு மாணவிகள் ஆகிய ஆறு பேர் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுமான பிரவீன் (19) ஓட்டினார். காரில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் என்பவரின் மகள் சுரேகா (18), கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மந்த்ரா (18), திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெரியநாயகி (18), கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த  சுவேதா (18), கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த திலக் (19) ஆகியோர் பயணம் செய்தனர். 



அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதியது.
மோதியதில் கார், சாலையின் மறுபுறம் பாய்ந்து ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி வந்த இன்னொரு கார் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...