சசிகுமார் கொலை: சிபிசிஐடி போலீஸ் சந்தேகிக்கும் நான்கு நபர்கள்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 8 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

ஆனால் காவல் துறையினர் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு மாற்றி காவல் துறை தலைவர்ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோவைக்கு வருகை தந்த சி.பி.சி.ஐ.டி பிரிவுஏ.டி.ஜி.பி கரண் சின்ஹா மேற்கு மண்டலகாவல் துறையினரிடம் வழக்கு தொடர்பானஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். இதையடுத்து சசிகுமார் செல்போன் அழைப்புகள் மற்றும் கொலை நடந்த நாளான்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து சுப்பிரமணியபாளையம் வரை சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடந்தி வந்தனர். 

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் சசிகுமார் கொலை வழக்கில் சந்தேகப்படும் படியாக நடமாடிய நபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான முக்கியமான 14 புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்த தகவல்களை சிபிசிஐடி காவல் துறையினருக்கு தெரியபடுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள காவல் துறையினர், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தெரியபடுத்தலாம் என அறிவித்துள்ளனர்.











Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...