குன்னூரில் தனியார் தோட்டங்களில் காய்த்துத் தொங்கும் பலாப் பழங்கள் : யானைகள் முகாமிட்டிருப்பதால் கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் அதிகளவில் பலாப் பழங்கள் காய்த்துள்ளதால், இதனை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் அதிகளவில் பலாப் பழங்கள் காய்த்துள்ளதால், இதனை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான வனப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள தனியார் தோட்டங்களில் பலாப் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், உணவிற்காக இப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், குரும்பா கிராமம், நஞ்சப்ப சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள தாழ்வான மரங்களில் இருக்கும் பலாப் பழங்களை உண்பதற்காக, யானைகள் வந்து செல்வதால், இங்குள்ள குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் என பலரும் அச்சமடைந்துள்ளனர். 



இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், யானைகள் அவ்வப்போது ரயில் தண்டவாளம் மற்றும் சாலைகளுக்கு வந்து செல்ல வாய்ப்பிருப்பதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...