சசிகுமார் கொலை வழக்கு: திசை திருப்பும் சி.பி.சி.ஐ.டி !

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாக அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் காவல் துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக இந்து முன்னணியை சேர்ந்த ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் காவல் துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆன்ந்த குமாரை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல் துறையினர் அச்சுறுத்தல் காரணமாகவே ஆனந்தகுமார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கைது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கையை இருப்பதாகவும் இதன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தொடர்பாக விசாரிக்க சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கையும் இந்த பகுதிகளில் தலைதூக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சசிகுமார் கொலை வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலிசார் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாக கூறி வருவதாகவும் அதே வேளையில் இந்த வழக்கினை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்ததை போல அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த காடேஸ்வரா சுப்பிரமணியத்துடன் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...