கோவையில் தாயின் கண் முன்னே இளைஞர் கொலை செய்யப்பட் சம்பவம் : 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.

கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.

தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவர் ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அவரது தாயாருடன் வீரகேரளம் அருகே மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் இருந்து கீழே தள்ளி கத்தியால் சரமாரியாகக் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில், மகனை காப்பாற்றுமாறு சந்தோஷின் தாயார் பிரேமலதா கதறி அழுதுள்ளார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்தோஷ், தாயின் கண்முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குடியரசுக் கட்சியில் அவருடைய சித்தப்பாவுடன் இணைந்து பணியாற்றி வந்த சந்தோஷ், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பின்னர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நபர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த கும்பல் இவரை கொலை செய்ததாகத் தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த ரமேஷ், விஜயகுமார், மது, கர்ணபிரசாத் ஆகிய 4 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...