உதகையில் 3 நாட்களில் சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோடை விழாவைக் கண்டு ரசிக்க கடந்த 3 நாட்களில் உதகைக்கு சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோடை விழாவைக் கண்டு ரசிக்க கடந்த 3 நாட்களில் உதகைக்கு சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.



உதகை மக்களவை தேர்தலையொட்டி, நடப்பாண்டு கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்டது. உதகை மலர் கண்காட்சிக்கு, சுமார் 1.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவ்வப்போது, பெய்து வரும் மழைக்கு இதமான காலநிலையை, சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடிந்தது. கடந்த 3 நாட்களில் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு, சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு சவாரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.



உதகை நகரில் பேருந்து நிறுத்தம் முதல் குன்னூர் சந்திப்பு சாலை, தாவரவியல் பூங்கா, மதுவானா சந்திப்பு, பிங்கர்போஸ்ட், படகு இல்லம் சாலைகளில் ஏற்பட்ட வாகன நெரிசலால் சுற்றுலா வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். நெரிசலால் குறிப்பிட்ட நேரத்திற்கு சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...