சர்வதேச சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : டிராவல்ஸ் அதிபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்

திருப்பூர் : மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி பலரிடம் ஒரு கோடி ரூபாயிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர் : மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி பலரிடம் ஒரு கோடி ரூபாயிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 



திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சங்கம் மூலம் வெளிநாட்டு சுற்றுலாச் செல்ல திட்டமிடப்பட்டு, அவிநாசி சாலையில் உள்ள டிராவல் கிராப்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை அணுகியுள்ளனர். முதற்கட்டமாக, 35 பேர் மலேசியா சென்று வந்த நிலையில், அடுத்து 30 பேர் செல்ல திட்டமிடப்பட்டு 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். 



அதே போல, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவரும் குடும்பச் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயண டிக்கெட் மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என 28 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுபோன்று பலரிடம் பணம் வாங்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மணிமாறன், தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலைக்கழித்து வந்துள்ளார். மேலும், தற்போது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டவர்கள் டிராவல்ஸ் அதிபர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, தங்களை போலவே பலர் குழுவாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும், தங்கள் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...