ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கணபதி மோர் மார்க்கெட் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணபதி மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :- காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு குற்றமற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் 14-ம் தேதி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அன்று மாலையே ஏழு பேர் சரணடைந்து விட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர். காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். சிறையில் உள்ளவர்களை பார்க்க சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூகமான சூழல் ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தனர். 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...