சொத்துக்காக கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள் : பாதுகாப்பு கோரி கணவனை இழந்த பெண் 4 வயது குழந்தையுடன் மனு

கோவை : சொத்து தகராறு காரணமாக தனக்கும், தனது 4 வயது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கணவனை இழந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவை : சொத்து தகராறு காரணமாக தனக்கும், தனது 4 வயது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கணவனை இழந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

 

தேர்தல் நடைமுறை விதிகளுக்குப் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனுக்கள் இன்று பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் ஒருவர், தனது 4 வயது குழந்தையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர், தனது கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், தங்களது உறவினர்கள் கூலிப்படை ஆட்கள் மூலம் மிரட்டுவதாகவும், இதனால் தனக்கும், தன் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 



இதனிடையே, மனு அளித்த பின்னர் சுஜாதா கூறும்போது :- நானும், என் கணவர் ஜெகன்மோகனும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு வர்ணா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், எனது கணவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது பங்கு சொத்துக்கள், சம்பாரித்த சொத்துக்கள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள விலை மதிப்பு அதிகமிக்க எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், அவரது பெரியப்பா மகன், மனைவி, மாமியார் ஆகியோர் சொத்துகளை எழுதி தரச் சொல்லி மிரட்டுகின்றனர். இல்லையெனில், எனது கணவரின் ஒரே வாரிசான வர்ணாவை கொலை செய்து விடுவோம் என தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர். 

தற்போது அடியாட்களைக் கொண்டு நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் பின் தொடர்கின்றனர். எனக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால், எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி உறவினர்களால் ஏமாற்றப்பட்ட சொத்துகளை கிடைக்கப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார். என வலியுறுத்து தன் நான்கு வயது குழந்தையுடன் வந்து மனு அளித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...