வீட்டு வரி புத்தகம் கொடுக்க லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி உதவி ஆணையர் உள்பட 2 பேர் கைது

கோவை : கோவையில் வீட்டு வரி புத்தகம் கொடுக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : கோவையில் வீட்டு வரி புத்தகம் கொடுக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி ஆணையர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (32). இவர் அதே பகுதியில் தரைத்தளம், முதல்தளம் கொண்ட வீட்டை கட்டியுள்ளார். அதற்கு சொத்து வரி புத்தகம் பெற மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். சொத்து வரி புத்தகம் வழங்க ரூ. 15 ஆயிரம் லஞ்சத் தொகையாக தருமாறு உதவி ஆணையர் ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரூ. 12 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். அந்த தொகையை வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த தரகர் பாலகிருஷ்ணனிடம் (59) வழங்குமாறு கூறியிருந்தார். 



லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் குமார் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகி புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் தாள்களை குமாரிடம் கொடுத்தனர். அந்த தொகையை இன்று காலை பாலகிருஷ்ணனிடம் குமார் கொடுத்தார். பணத்தை அவர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் லஞ்ச தொகையை வாங்கக் கூறிய மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமாரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...