கோவை : தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளிக்க வந்த இளைஞர் பூச்சி மருந்து அருந்துவிட்டதாகாகக் கூறி நாடகமாடிய சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்சல் (38). புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். தேர்தல் நடைமுறைகளுக்கு பின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இன்று மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு வந்த அப்சல் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதால், அவர்களுடன் சேர்த்து வைக்கக்கோரி பூச்சி மருந்து குடித்து விட்டதாகக் கூறி உள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார், அவரை உடனடியாக அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அப்சலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தவில்லை என தெரிந்து அவரை திருப்பி அனுப்பினர். பின்னர், அங்கிருந்து வந்த அப்சல் மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரி மனு அளித்தார். தேர்தல் விதிமுறைகளுக்கு பின்னர் மனுக்கள் பெறப்படும் முதல் நாளில் விஷம் அருந்தியதாக நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.