குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 2 நாள் பழக்கண்காட்சி நிறைவு

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று நடைபெற்ற பழக்கண்காட்சியின் இறுதி நாளில், சிறந்த பழங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று நடைபெற்ற பழக்கண்காட்சியின் இறுதி நாளில், சிறந்த பழங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



நீலகிரி மாவட்டத்தில் சீசனை முன்னிட்டு நடத்தப்படும் கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி சனிக்கிழமை சிம்ஸ்பூங்காவில் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவுவாயில் பன்னிரெண்டு அடி உயரத்தில் பலாப்பழம், பம்பளிமாஸ் வாழை, எலுமிச்சை, அண்ணாசி, ஆரஞ்சு, மாம்பலம், போன்ற பழங்களை கொண்டு அலங்கார வளைவும், சுமார் ஓன்றரை டன் எடையில் ஆரஞ்சு ஆப்பிள், அண்ணாசி, மாதுளை, பம்பளிமாஸ், டிராகன் பழம் போன்ற பழங்களை கொண்டு விவசாய தம்பதிகளுடன் கூடிய பழவண்டி, அலங்கார மேடை, மயில் உருவம் வண்ணத்துப்பூச்சி ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



நீலகிரி மாவட்டத்தில் விளையும் பழவகைகள் காய்கறிகளான பிளம்ஸ், பீச், சப்போட்டா மற்றும் பல்வேறு பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், பழரசம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது மட்டுமின்றி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளான பீன்ஸ், ஊருளை கிழங்கு, கேரட் பீட்ருட், நூல் கோல், முட்டைகோஸ் போன்றவை அரங்கில் இடம்பெற்றிருந்தன , இதில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, உரோடு, விழுப்புரம், கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக் கலைதுறையினர் கலந்து கொண்டனர்.



இந்த பழக்கண்காட்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரிதான பழங்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தவர்கள், பல்வேறு மருத்துவ குணமிக்க பழங்களை பங்கேற்க செய்தவர்கள், வீட்டுத் தோட்டங்கள், அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறந்த பூந்தோட்டங்களுக்கான பரிசுகள் என 50-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், கோட்டாட்சியர் ரஞ்சித்சிங், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிஷா, சிம்ஸ்பூங்கா மேலாளர் கோபால் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...