கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 50-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 50-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 50-வது வாரமாக வால்பாறை செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே பள்ளமான பகுதியில், தன்னார்வலர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி, அங்கு அதிகளவில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை சேகரித்து முழுமையாக அப்புறப்படுத்தினர். மேலும், முள் செடிகளை வெட்டி எடுத்து அந்த பகுதியில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டது.

இந்த 50-வது வார களப்பணியில் கேரளாவின் சார்பில் கீரினரி கார்ட்ஸ் ஆப் இந்தியா, கோவை குளங்கள் அமைப்பு, கோவை நேச்சர் அன்ட் அனிமல் கன்சர்பவன்சி அமைப்பு, ஒரு விதை புரட்சி-இயற்கை பவுண்டேஷன், சென்னையை சார்ந்த ஐந்திணை -இது சென்னை டிரக்கிங் கிளப் பின் ஒர் அங்கம், நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பு, பொள்ளாச்சி ஸ்ரீ ராம் அறக்கட்டளை சார்பில் உணவு கடவுள் சுகுமார் அண்ணா ஆகிய அமைப்புகளும் இணைந்து களப்பணியில் ஈடுப்பட்டது.
மேலும், ஒரு விதை புரட்சி என்ற திட்டம் டெல்டா மாவட்ட மக்களுக்கு மரகன்றுகளை வழங்க இயற்கை பவுண்டேஷன் முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு டார்கெட் ஜீரோ மற்றும் நேச்சர் அன்டு அனிமல் கன்சர்பவன்சி அமைப்பும் இணைந்து மரக்கன்று அளித்தன.