முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து சோமையம்பாளையம் பகுதி பொதுமக்கள் சாலைமறியல்

கோவை. : முறையான குடிநீர் வழங்காத சோமையம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை. : முறையான குடிநீர் வழங்காத சோமையம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் ஆறு மாத காலமாக குடிநீர் சரியாக வழங்கப்படாததால், அடிக்கடி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபடும் சமயத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் முறையாக வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை புகராளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால், இப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர். 



இந்நிலையில், கணுவாய் - ஆனைகட்டி சாலையில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் இன்று காலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சனையால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்பகுதி மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...