அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி சென்ற இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார் : திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இந்திய மாணவர் சங்க சைக்கிள் பேரணியை காவல்துறையினர் திருப்பூரில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் 4 மண்டலங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றைய தினம் சைக்கிள் பேரணியை துவங்கினர். 



சென்னை, கோவை, கன்னியாகுமர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துவங்கிய பேரணி 31-ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. இந்த நிலையில், கோவையிலிருந்து திருப்பூர் வழியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை அனுமதி இல்லையென காவல்துறையினர் வீரபாண்டியருகே தடுத்து நிறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர், போலீசாரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மாணவர் சங்கத்தினர் தங்கள் பயணத்தை துவங்கினர். இந்த பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...