தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை கன்று உயிரிழப்பு

கோவை : ஆனைகட்டி அருகே வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை கன்று உயிரிழந்தது.

கோவை : ஆனைகட்டி அருகே வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை கன்று உயிரிழந்தது.



சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் அருகே உள்ள மூங்கில் பள்ளம் பகுதியில் வனத்துறையினர் சார்பில் சிமெண்ட் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில், தண்ணீர் குடிப்பதற்காக காட்டெருமை கூட்டம் வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டெருமை கன்று ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. வெகு நேரமாக மேலே வர முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், அங்கு வந்த ஆடு மேய்ப்பவர்கள், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த காட்டெருமை குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தண்ணீர் தொட்டி வலுக்கும் விதமாக இருப்பதால், அந்த கன்று வெளியே வர முடியாமல் திணறியது.



இறுதியில், கயிறு கட்டி அதனை வெளியே மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்த நிலையிலேயே காட்டெருமை கன்று மீட்கப்பட்டது.

இதனிடையே, முறையான அமைப்பில் தண்ணீர் தொட்டி அமைக்காததே, வன விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழப்பதற்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



“அண்மையில் சில கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர்தொட்டியில் விழுந்து மான் உயிரிழந்தது. எனவே, தொட்டியின் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்கிறார் உள்ளுர்வாசி.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...