100-வது நாளாக கிராலில் அடைபட்டிருக்கும் சின்னத்தம்பி : நோய் தொற்று ஏற்பட்டதாக உலா வரும் வதந்தியான செய்திகள்

கோவை : விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானை 100-வது நாளாக மரக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது.


கோவை : விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானை 100-வது நாளாக மரக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. 

பன்னிமடை மற்றும் தடாகம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக கோவையில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி வரகலியாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து மீண்டும் வெளியேறிய சின்னத்தம்பி, திண்டுக்கல் மற்றும் உடுமலைபேட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் சின்னத்தம்பி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. இதன்மூலம், சின்னத்தம்பி கூண்டில் அடைக்கப்பட்டு 100 நாட்களை எட்டியுள்ளது. 

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்கள் முடிந்த நிலையில், தற்போது வனத்துறையின் அலட்சியத்தால், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி நோய் வாய்பட்டு கீழே விழுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி செய்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக உயரதிகாரிகள் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சின்னத்தம்பி நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், பாகன்கள் மற்றும் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

" சின்னத்தம்பிக்கான பயிற்சி காலங்கள் முடிந்து, கூண்டில் இருந்து வெளியே விடும் நேரம் நெருங்கி விட்டது. இது போன்ற வதந்தியான தகவல்களை தவிர்த்தால், அமைதியாக எங்களது பணி முடியும். இதுபோன்ற யானைகளை அடக்கி கையாளுவதற்காக, வரகலியாறு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து நன்கு அனுபவம் கொண்ட பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த பாகன்கள் ஏற்கனவே பல்வேறு யானைகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். பொதுவாக, கூண்டில் அடைக்கப்படும் காட்டு யானைகளின் குணங்களில் ஆக்ரோஷம் காணப்படும். இதனால், மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டு, அமைதிபடுத்தப்படும். ஆனால், சின்னத்தம்பியிடம் இதுபோன்ற குணங்கள் எதுவும் தென்படவில்லை," என்கின்றனர் வனத்துறை உயர் அதிகாரிகள்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...