காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : மத்திய அமைச்சர் அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தகவல்

கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.


கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாக பெருக்கும் வகையில், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலும், தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தார். 

இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜ.க. தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில். மத்திய தரைவழி கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளனர். அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் முதல் வேலை," எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...