கோவை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 3.87 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கோவை மக்களவை தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறா விட்டாலும், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு, காரணம் அக்கட்சியினர் நடத்திய பேரணி மற்றும் பிரச்சாரங்களே ஆகும். இதன்மூலம், எதிர்வரும் தேர்தல்களில் புது நம்பிக்கையுடன் அக்கட்சி எதிர்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களை ஒப்பிடுகையில், கிராமப்புற தொகுதிகளில் மட்டுமே அதிகளவிலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. எனவே, நகர்ப்புற தொகுதிகள் மற்றும் தொழில்நகரங்களில் வாக்கு வங்கிகளை அதிகரிக்க நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"எங்களின் கட்சி தொண்டர்களின் கடினமான உழைப்பின் பிரதிபலிப்பாக தேர்தல் முடிவுகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, நாங்கள் வாங்கிய வாக்குகளை, இந்த ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும். இது எதிர்வரும் தேர்தலிலும் அதிகரிக்கும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட எங்கள் கட்சி மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறது. தொடர்ந்து, மக்களுக்கு சேவை செய்வோம்," என்கிறார் கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கல்யாணசுந்தரம்.
மேலும், அவர் பேசுகையில், "தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு, பா.ஜ.க. மற்றும் மோடியை தமிழக மக்கள் எதிர்ப்பதே காரணமாகும். மக்களவை தேர்தலில் பெற்ற தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம், சட்டப்பேரவை தேர்தலில் என குறையும்," என்றார்.
கோவை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ப.ஆர். நடராஜனுக்கு வாழ்த்துக் கூறிய கல்யாணசுந்தரம், பி.ஆர். நடராஜன் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர் என்றும், அவர் கோவை மக்களுக்காக பாடுபடுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.