கோவையில் விதிகளை மீறி தொடர்ந்து செயல்படும் பைக் டாக்ஸி : ஆட்டோ ஓட்டுநர்கள் சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரேப்பிட்டோ பைக் டாக்ஸியானது கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உரிய உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தில் பைக் டேக்ஸி பயன்படுத்தி வருவது போக்குவரத்து விதிமீறல் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து இந்த பைக் டேக்ஸியானது செயல்பட்டு வருகிறது. இது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பைக் டேக்ஸிகளை ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் வழிமறித்து பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். 

இந்த நிலையில், இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி ஓட்டி வந்த பைக் டாக்ஸிகளை சிறைப்பிடித்து கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது :- ஏற்கனவே ஆட்டோ தொழில் முற்றிலும் ஒழிந்து வருகிறது. இதில், ஏதோ கொஞ்சம் கொஞ்சம் வாடகையை ஓட்டி எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், பைக் டாக்ஸி என்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தினர் எங்கள் வாழ்வாதாரத்தில் இடைஞ்சல் ஏற்படுத்துகின்றனர். அதேபோல, எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த பயணத்தினால், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, இந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...