கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் பலா பழம் : ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பண்ணையில் ஆண்டுதோறும் சராசரியாக 130 முதல் 140 செ. மீட்டர் வரை மழைப்பொழிவு இருக்கும். எனவே, மிதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவுவதால், இங்கு மா, பலா, எலுமிச்சை, கொய்யா போன்ற பழ மரங்களும், பழங்களின் அரசியான மங்குஸ்தான் மற்றும் துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான் என பல்வேறு விதமான வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை பழங்களும் இங்கு வளர்கின்றன. சீசன் காலங்களில் இங்கு விளையும் பழவகைகள் நேரடியாக விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.



கல்லார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட பலா மரங்கள் உள்ளன. தற்போது, இந்த பலாப்பழம் மரங்கள் அனைத்தும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. இதில், உயர் விளைச்சல் தரக்கூடிய வேலிப் பலா, சிங்கப்பூர் பலா, பர்லியாறு பலா, கல்லாறு பலா ஆகிய நான்கு வகையான பலா பழங்கள் மரங்களில் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்கள் கல்லாறு பழப் பண்ணையின் உள்ள ஊழியர்கள் மூலம் பறிக்கப்பட்டு பண்ணையில் உள்ள விற்பனை நிலையத்தில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 10 ரூபாய் வீதம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மற்ற பலாப் பழங்களை விட கல்லாறு பழப்பண்ணையில் கிடைக்கும் பலா பழம் மிகுந்த சுவையுடன் காணப்படுவதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.



Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...