கோவை : மக்களவை தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகளுடன் 3-வது இடத்தை பிடிக்க உறுதுணையாக இருந்த கோவை மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஆர். மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆன கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக களம் கண்டது. இதில், தேர்தலுக்கு 20 நாட்களாக முன்னதாக, அதாவது, மார்ச் 24 கோவை தொகுதிக்கான வேட்பாளரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். வேட்பாளர் கோவை மக்களுக்கு அறிமுகமில்லாதவராகவே இருந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஆர். மகேந்திரன், வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், மருத்துவராகவும் திகழ்ந்து வருகிறார்.

கோவையில் தி.மு.க., அ.தி.மு.க. என முக்கிய கட்சிகளின் கூட்டணிகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரன் களமிறங்கினார். இவரது தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் கொள்கைகளின் மூலம் வாக்காளர்களை எளிதில் கவர்ந்தார். இதன்மூலம், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, 1,45,000 வாக்குகளுடன் 3-வது பிடித்தார். இது ஏறத்தாழ 12 சதவீத வாக்குகளாகும். தேர்தலுக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இத்தனை வாக்குகளைப் பிரிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, இளைஞர்கள், நடுநிலை வாக்காளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் உள்ளிட்டவர்களிடையே டாக்டர்மகேந்திரனுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவையில் மக்கள் நீதி மய்யம் வலுவான நிலை குறித்து டாக்டர் மகேந்திரன் பேசுகையில், என் மீது நம்பிக்கை வைத்த கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது கட்சி மாற்றுக் கட்சியாக உருவெடுத்துள்ளது. அனைத்து வெற்றியாளர்களுக்கும், குறிப்பாக பி.ஆர். நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் கோவை மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். அடுத்த 5 ஆண்டுகள் கோவை மாநகரை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மேற்கொள்வார் என நம்புகிறோம்," என்றார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே தற்போது நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. வரும் நாட்கள் மற்றும் ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் டாக்டர் ஆர். மகேந்திரனும் மாற்று சக்தியாக மாறுவார்களா..? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.