திருப்பூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சி.பி.ஐ. பேனரில் பெயர் இல்லாததால் பிரச்சனை : தி.மு.க.வின் பேனரை கிழித்தெறிந்த சக கட்சி நிர்வாகி

திருப்பூர் : திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயன் வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில் தி.மு.க. நிர்வாகியின் பெயர் போடாததால், ஆத்திரத்தில் பேனரை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் : திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயன் வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில் தி.மு.க. நிர்வாகியின் பெயர் போடாததால், ஆத்திரத்தில் பேனரை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சுப்புராயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தனை விட 93,368 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. வினரும் வாழ்த்து மற்றும் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்களும், பேனர்களையும் வைத்தனர். இதில், திருப்பூர் வளம் பாலம் அருகே செல்லாண்டியம்மன் கோவில் அருகே 44-வது வார்டு பகுதி கழக இளைஞர் அணி பொறுப்பாளர் (ஷ்டிம்) ரியாஜ் என்பவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெற வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, 10 அடி உயரம் மற்றும் 40 அடி நீளத்தில் பேனர் ஒன்றை வைத்தார்.

இந்த பேனரில், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் புகைப்படம் மற்றும் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 44-வது வார்டு பகுதி கழக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான உசேன் என்பவரின் பெயர் மட்டும் விடுபட்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், தனது பெயர் போடாமல் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தெறிந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தி.மு.க.வினர் கிழிக்கப்பட்ட பேனரை உடனடியாக அகற்றியதுடன் அந்த இடத்தில் சிறிய அளவிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேனரை மட்டும் வைத்து சென்றனர். பெயர் போடாமல் வைக்கப்பட்ட பேனரை அதே கட்சியினர் கிழித்தெறிந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...