இருகூர் அருகே பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து : ரூ. 1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பல்

கோவை : இருகூர் அருகே உள்ள பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.


கோவை : இருகூர் அருகே உள்ள பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.



கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இருகூர் பகுதியில் சுமார் 7 ஆண்டு காலமாக பஞ்சு சேமிப்பு கிடங்கு வைத்துள்ளார். மேலும், இங்கு சேமித்து வைக்கும் பஞ்சுகளை பஞ்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பஞ்சுகளை கிடங்கில் புதிதாக சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அந்த குடோனில் இருந்து லேசாக கரும்புகை கிளம்பியுள்ளது. இதை கண்ட அருகே இருந்த பொதுமக்கள் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயானது கட்டுக்குள் அடங்காததால், மேலும் மூன்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ பரவியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...