தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன ஊழியர் உயிரிழந்த விவகாரம் : 28-ம் தேதி மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

கோவை : தொழில் அதிபர் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமியின் உடலை வரும் 28-ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : தொழில் அதிபர் மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமியின் உடலை வரும் 28-ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிச்சாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காசாளர் பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அந்தப் பரிசோதனையின்போது இறந்து போன பழனிச்சாமி தரப்பின் சார்பில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் இருக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட காயங்கள் மற்றும் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட இதர ஆவணங்களை நீதிபதி ஆராய்ந்தார். பின்னர் இந்த மாதம் 5-ம் தேதி செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இறுதியறிக்கை ஆகியவைகள் முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மேற்கண்ட காரணங்களால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் குழு அல்லாமல், இரண்டிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழுவினரை வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த பிரேத பரிசோதனையில் மனுதாரர் தரப்பில் டாக்டர் சம்பத்குமார் இந்த குழுவில் இருப்பார் எனவும், அதேபோல, பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதி, இந்த பிரேத பரிசோதனையை வரும் 28ம் தேதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...