கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு : மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை : கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை : கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த மாதம் 18-ம் தேதி கோவை மாநகர் போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட நபி நகரில் வெளிநாட்டு உயர் ரக கார்களின் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பரந்தராமன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர் அதில், சின்னியம்பாளையம் அருகே உள்ள கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்த ரவி (30)அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30) திருப்பூரைச் சேர்ந்த நவீன் (25) மற்றும் ராஜன் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த நிலையில், மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேவராஜ், மகேஸ்வரன், கார்த்திக் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போத்தனூர் போலீசார் காவல் ஆணையரிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை போத்தனூர் போலீசார் மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...