உதகையில் பள்ளி மாணவர்களின் குதிரை சாகச விளையாட்டு : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

நீலகிரி : உதகையில் சர்வதேச தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் குதிரை சாகச விளையாட்டுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி : உதகையில் சர்வதேச தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் குதிரை சாகச விளையாட்டுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

உதகை லவ்டேல் பகுதியில் இயங்கி வரும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பழம்பெரும் சர்வதேச தனியார் பள்ளியின் 161-வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, இன்று மாணவ, மாணவியர் கலந்து கொண்ட குதிரைகள் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. குதிரைகள் மீது அமர்ந்தவாறே பல்வேறு உடற்பயிற்சிகள் செய்வது, புத்தகம் படிப்பது, படுத்து கொள்வது போன்ற சாகசங்களை அவர்கள் செய்து அசத்தினர். 



இதைத் தொடர்ந்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தடைகளை குதிரையோடு தாண்டி செல்லும் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 8 வயது முதல் 15 வயதுடைய மாணவ, மாணவிகள் இச்சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், நன்கு பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...