கங்கா மருத்துவமனைக்கு வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருது

கோவை : கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு ஆராய்ச்சி குழுவிற்கு இந்த ஆண்டிற்கான வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு ஆராய்ச்சி குழுவிற்கு இந்த ஆண்டிற்கான வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் (NASS)  மற்றும் தி ஸ்பைன் ஜார்னல் (TSJ) ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்கியது. கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் மருத்துவர். எஸ். ராஜசேகரன் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம், முதுகெலும்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருதை இந்தியாவில் முதல் முறையாகப் பெற்ற மருத்துவமனை என்ற பெருமையை கங்கா மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த விருதுடன் சுமார் 7 லட்சம் மதிப்பிலான ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. 

வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி சிகாகோவில் நடக்கும் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒரு பகுதியாக நடக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...