கோவை : கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு ஆராய்ச்சி குழுவிற்கு இந்த ஆண்டிற்கான வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் (NASS) மற்றும் தி ஸ்பைன் ஜார்னல் (TSJ) ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்கியது. கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் மருத்துவர். எஸ். ராஜசேகரன் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம், முதுகெலும்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் விருதை இந்தியாவில் முதல் முறையாகப் பெற்ற மருத்துவமனை என்ற பெருமையை கங்கா மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த விருதுடன் சுமார் 7 லட்சம் மதிப்பிலான ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
வட அமெரிக்க முதுகெலும்பு ஆராய்ச்சி சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி சிகாகோவில் நடக்கும் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்க கங்கா மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒரு பகுதியாக நடக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.