கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

சூலூர் தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து சூலூர் உள்ளிட்ட இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடைபெற்றது. அதில், அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி 10,0782 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 90,669 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம், 10 ஆயிரத்து 113 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கந்தசாமி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் 16,530 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 6,644 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் 4,335 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ள கந்தசாமி, மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.