போத்தனூர் அருகே இரட்டை கொலை சம்பவம் : இந்து அமைப்பு நிர்வாகி உட்பட இருவர் கைது

கோவை : போத்தனூர் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : போத்தனூர் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷின் மகன் ஜான் பிரிட்டோ (28). இவர் மீது கஞ்சா வழக்கு கொலை வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. அதே போல, அவர் அந்த பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், ஜான் பிரிட்டோ நேற்று முன்தினம் செட்டிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது, மது போதையில் கடைக்குள் இருந்த காட்வின் ராஜ், நித்திய குமார் என்ற குட்டி, மில்டன் ராபின் ஆகியோரிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும், ஜான் பிரிட்டோ மூன்று பேரையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஜான் பிரிட்டோவை அவரது நண்பருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். இந்த நிலையில், கொலை செய்வதாக மிரட்டிய ஜான் பிரிட்டோவை பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வீட்டிற்கு மூன்று பேரும் பின்தொடர்ந்தனர்.

பின்னர், அவரது வீட்டிற்குச் சென்ற பொழுது ஏற்பட்ட கைகலப்பில் காட்வின் ராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ஜான் பிரிட்டோவை முதலில் குத்தினார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஜான் பிரிட்டோ காட்வின் ராஜை சரமாரியாக குத்தினார். இதில், காட்வின் ராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கண்ட மில்டன் ராபின், மற்றும் நித்திய குமார் என்ற குட்டி ஆகியோர் ஜான் பிரிட்டோவை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்வின் ராஜை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், காட்வின் ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் செட்ரிக் இமானுவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் எந்த வழியாக எப்படி தப்பித்துச் சென்றனர்..? என்றும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தப்பிச்சென்ற நித்திய குமார் மற்றும் மில்டன் ராபின் ஆகியோர் செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நித்திய குமார் என்ற குட்டி அகில பாரத அனுமன் சேனாவின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகரில் நடைபெற்று வரும் தொடர் கொலை முயற்சி மற்றும் கொலைகளை தடுக்க காவல்துறையினர் தீவிரம் காட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சட்ட விரோத செயல்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...