கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கோவை மாநகர ஆணையரிடம் புகார்

கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சரத்தின் போது பேசியிருந்தார். அதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 13-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என கூறியிருந்தார். அதேபோல, மக்கள் அனைவரும் அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கரூரில் பரப்புரையின் போது கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.



மேலும், இந்த சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அதிகாரத்தில் இருக்கும் அமைச்சரே பொறுப்பற்ற முறையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக மற்ற கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடத்துவேன் எனக் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...