கோவை : கோவை மாநகரின் முக்கிய பிரச்சனையாக குப்பை கூளங்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் குப்பை மேலாண்மையை கையாளுவது எவ்வாறு என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகரில் உள்ள அனைத்து வார்டு மக்களும், தங்களது பகுதி குப்பை கிடங்காக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
கோவை : கோவை மாநகரின் முக்கிய பிரச்சனையாக குப்பை கூளங்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் குப்பை மேலாண்மையை கையாளுவது எவ்வாறு என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகரில் உள்ள அனைத்து வார்டு மக்களும், தங்களது பகுதி குப்பை கிடங்காக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

கீரணத்தம் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.டி. நிறுவனங்களின் வர்த்தக இடமாக மாற்றப்பட்டது. இங்கு, கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள கட்டிடங்கள் அருகே உள்ள வாய்க்காலில் மலை போன்ற உயரத்திற்கு குவிக்கப்பட்டுள்ள குப்பை குவியலை மறைக்கும் அளவிற்கு உயரமானவையாக உள்ளன. தற்போது, அந்த குப்பை மேட்டினால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளிப் பகுதிகளில் குப்பைகளை போடுவது தடுக்காததும், அவ்வாறு போடப்படும் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் பரவும் நோய்கள் பற்றியும் பொதுமக்கள் கவலையடைந்தனர். மேலும், இந்த குப்பை குவியலை அகற்றக் கோரி குடியிருப்புவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

“இந்த பிரச்சனை தொடர்பாக பலமுறை கோவை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், கீரணத்தம் பகுதி கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறுகின்றனர். நாளுக்கு நாள் அந்த குப்பை மலையின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுமக்களும் தொடர்ந்து குப்பைகளை வாய்க்காலில் கொட்டிக் கொண்டே வருகின்றனர்.100 சதவீதம் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு விட்டது,” என்கிறார் குடியிருப்புவாசி.
மேலும், 500 மீ. தூரத்திற்கு வாய்க்கால் குப்பைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதாகவும், மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டும் கொண்டார்.

இது மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது யார்..? இல்லை, உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் கவுன்சிலர் தேர்வு செய்யும் வரை காத்திருந்து புகார் அளிக்க
வேண்டுமா..? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.