கோவை : போத்தனூர் அருகே நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.
கோவை : போத்தனூர் அருகே நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.
போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ (28) என்பவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அங்குள்ள சில நண்பர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு செய்தவர்கள் அவரது வீட்டிற்கு பின் தொடர்ந்து சென்று, பெற்றோருடனும் தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது, திடீரென ஜான்பிரிட்டோவை சரமாரியாக கத்தியால் தாக்கினர். மேலும், இந்த சம்பவத்தின்போது, ஜான் பிரிட்டோவின் நண்பரான காட்வின் ராஜையும் கத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஜான்பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த காட்வின் ராஜை, பொதுமக்கள் காவல்துறையின் உதவியுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காட்வின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.