கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்ற கோவை மாநகராட்சி ஊழியர்கள்

கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும், பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.


கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும், பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். 

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாநகராட்சி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

உறுதிமொழி விபரம் வருமாறு :- அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமியின் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (கணக்கு) சரவணன், (நிர்வாகம்) மோகனசுந்தரி, (நிர்வாக அலுவலர்) மாணிக்கம், சட்ட அலுவலர் அமுல்ராஜ், குடிநீர் கணக்கு பிரிவு அலுவலர் லட்சுமிபிரபா, மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...