சூலூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து சீல் வைப்பு

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.



சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி மற்றும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று சூலூர் இடைத்தேர்தல் 324 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 2 இலட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 75.60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 3.81 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது. 



இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான கோவை - தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. இன்று அதிகாலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், கடைசி வாக்குப்பதிவு இயந்திரம் அதிகாலை 4.45 மணியளவில் வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டன.



சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வைப்பு அறைக்கு சீல் வைத்தார். துணை இராணுவ படையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...