மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் தினேஷ். இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் ஜந்து பேருடன் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக நெல்லித்துறை அருகே உள்ள குன்டுக்கல்துறை பகுதிக்கு சென்றுள்ளனர். சக நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்து விளையாடி கொண்டிருந்த நிலையில், தினேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுறது. தினேஷ்க்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் நீரிழ் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தினேஷை சடலமாக மீட்டனர். இதனையடுத்து, மீட்கபட்ட தினேஷின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...